டெல்டாவில் முதன் முறையாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன "நியூரோ நேவிகேஷன்" சிஸ்டம் மூளைகட்டி அறுவை சிகிச்சையில் அதிநவீனம்

Jul 17, 2026 - 19:13
டெல்டாவில் முதன் முறையாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன "நியூரோ நேவிகேஷன்" சிஸ்டம் மூளைகட்டி அறுவை சிகிச்சையில் அதிநவீனம்

டெல்டாவில் முதன் முறையாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன "நியூரோ நேவிகேஷன்" சிஸ்டம் மூளைகட்டி அறுவை சிகிச்சையில் அதிநவீனம்

திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத் துவமனையில் நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது குறித்து நரம்பியல் துறை சிகிச்சை டாக்டர்கள் பசல் இலாகி, சையத் அலி ஆகியோர் நிருபர்களிடம் கூறியது: இந்த சிகிச்சை மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகளில் மிகத் துல்லியமான வழிகாட்டுதலை வழங்கும் அறுவை சிகிச்சையாகும். தொடர்ந்து தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற பிரச்னைகளுடன் 16 வயது பெண் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். நரம்பியல் துறையில் மேற்கொண்ட பல்வேறு பரிசோதனையில் அவருக்கு மூளையில் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு நியூரோ நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி மூளையிலிருந்த கட்டி அகற்றப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்த பெண் முழு குணம் அடைந்து விட்டார். இந்த சிகிச்சை முறையில் மூளை கட்டிகள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிந்து மூளையின் முக்கிய செயல்பாட்டு பகுதிகளை பாதுகாத்து சிகிச்சை செய்யப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்படாது. ஜிபிஎஸ் கருவி போல இந்த கருவி செயல்படுவதால் அறுவை சிகிச்சைக்கான சரியான பாதை, கோணம் மற்றும் ஆழத்தை துல்லியமாக கண்டறியலாம். ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்து நோயாளிகளுக்கு விரைவில் குணம் ஏற்படும். திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிறந்த உள்கட்டமைப்பு, நவீன தொழில் நுட்பம், அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இருப்பதால் அனைத்து சவாலான சிகிச்சைகளுக்கும் சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது என்றார். நரம்பியல் துறை டாக்டர்கள் செந்தில்குமார், மயிலன் சின்னப்பன் உட்பட பலர் உடனிருந்தனர். திருச்சி மற்றும் டெல்டா பகுதிகளில் முதல் முறையாக திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் மேம் பட்ட சி.டி. பெர்ப்பூயுஷன் மைய தொழில் நுட்பத்துடன் கூடிய பக்கவாத ஒருங்கிணைப்பு சிகிச்சை மையத்தை திருச்சி அப்பல்லோ மருத்துவமனை தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஸ்ரீவித்யா வரவேற்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0