திருச்சியில் அரவிந்த் அகாடமி சார்பில் ஓவியத்தில் மாபெரும் உலக சாதனை

Jul 19, 2026 - 21:18
Jul 19, 2026 - 21:20
திருச்சியில் அரவிந்த் அகாடமி சார்பில் ஓவியத்தில்  மாபெரும் உலக சாதனை

திருச்சியில்  அரவிந்த் அகடமி சார்பில் ஓவியத்தில் மாபெரும் உலக சாதனை 

குழந்தைகள் கைப்பேசி பயன்பாட்டை குறைக்கும் முயிற்சி 500 மாணவர்கள் ஒன்றிணைந்து "கற்பனைச் சிறகுகள்" என்ற தலைப்பில் ஓவியம் வரைந்த சாதனை முயற்சி.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியானது ஜெட்லி உலக சாதனை புத்தகம் மற்றும் ரெக்கார்ட்ஸ் இந்தியா அகாடமி புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

 இந்நிகழ்ச்சிகளில் நடுவர்களாக கலை வளர்மணி ஜெயவர்த்தினி மற்றும் பிரேமலதா ஆகியோர் செயல்பட்டனர். இந்நிகழ்ச்சியானது திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கி ஆறு மணிக்கு முடிந்தது. இதில் ரயில்வே தமிழரசன், முனியாண்டி மற்றும் 1000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டார்கள். போட்டி ஏற்பாடுகளை அரவிந்த் அகாடமி நிறுவனர் ராஜலட்சுமி அரவிந்த் ஏற்பாடு செய்திருந்தார்.

What's Your Reaction?

Like Like 14
Dislike Dislike 0
Love Love 6
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 4