திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் புதிய சங்கம் துவக்கம்

Jul 28, 2026 - 12:45
Jul 28, 2026 - 12:46
திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் புதிய சங்கம் துவக்கம்

திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் புதிய சங்கம் துவக்கம்

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 3242F மற்றும் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் முன்னெடுப்பில், திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் புதிய சங்கம் துவக்க விழாவும், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவும் திருச்சியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பிரசன்ன வெங்கடேசன் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் ஜே. சில்வியா நெப்போலியன் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் லயன் விஜயலட்சுமி சண்முகவேல், புதிய சங்கத்தை துவக்கி வைத்து சேவைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வாழ்த்துரை வழங்கினார். புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து, உறுப்பினர் வளர்ச்சி குழுத் தலைவர் லயன் ரவி வாழ்த்துரை வழங்கினார். விரிவாக்க சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமரன், மாவட்ட அமைச்சரவை செயலாளர் சசிதரன், மாவட்ட பொருளாளர் எழிலரசி ரவி, மாவட்ட நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட நிதி அலுவலர் சௌந்தரபாண்டியன், மாவட்ட நிர்வாக அதிகாரி நடராஜன், சங்க வழிநடத்துதல் செயலாளர் சரவணபெருமாள், இலக்கு உந்துனர் சரவணகுமார், ஆளுநர் செயலர் சிவராமகிருஷ்ணன், மாவட்ட நிதி ஆலோசகர் ஜோசப், மண்டலத் தலைவர் முகமது சபி, லீடு டோனார் வையாபுரி, வட்டாரத் தலைவர் சரவணன், மாவட்ட அவை இணைச் செயலாளர் பொன்னுவேல், மாவட்ட இணைப் பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி புதிய சங்கத்தின் வளர்ச்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் சங்கத்தின் தலைவராக ஹேமலதா, செயலாளராக விஜயகுமார், பொருளாளராக முகமது ஹயாஸ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மேலும், துணைத் தலைவர்களாக முனைவர் சங்கர், கணேசன், இயற்கை மருத்துவர் கௌதமன், ஹரி பிரசாத், மகேஸ்வரி, கிருஷ்ணகாந்த், உஷா கேசவன், சந்தானம் உள்ளிட்டோர் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0