திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி அம்மா மண்டபம் ஆற்றங்கரையில் தூய்மைப் பணி
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி அம்மா மண்டபம் ஆற்றங்கரையில் தூய்மைப் பணி
திருச்சி காவிரி ஆற்றின் அம்மா மண்டப படித்துறையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைந்து மா காவிரி தூய்மை பணி குழு, ஸ்ரீமாந் டிரஸ்ட் ஸ்ரீ ரங்கம், சீதா லக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், சின்மயா வித்யாலயா ஸ்ரீரங்கம் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள், இன்னர் வீல் கிளப் ஆஃப் மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளி நீதிமன்ற எம்ஜிஆர் சிலை நடைமேடை நடை பயிற்சியாளர்கள் அமைப்பு, ஆயிர வைசிய மஞ்சபுத்தூர் சமூகத்தினர், ராதா கிருஷ்ண மாதர் பஜனை மண்டலியினர், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் குழுவினர் திருச்சி மா- காவிரி தூய்மைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பத்ரிநாராயணன், பத்மகிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் இயற்கையையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். நம் வாழ்வின் ஆதாரமான காவிரி ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும்."தூய்மையான காவிரி – வளமான தமிழகம். காவிரி நீரை நேசிப்போம்; இயற்கையை காப்போம். காவிரியைத் தூய்மைப்படுத்துவோம்! சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் எனது உறுதியேற்று சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் விட்ட சுமார் ஒரு டன் கணக்கான துணிகளை அகற்றினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0