திருச்சி லால்குடி செந்தமிழ்ச்செல்வி கொலை வழக்கு குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் மாபெரும் போராட்டம் : பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் நிறுவனர் திருமலை எம் ரவி பார்க்கவன் அறிவிப்பு

Jul 29, 2026 - 14:34
திருச்சி லால்குடி செந்தமிழ்ச்செல்வி கொலை வழக்கு  குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் மாபெரும் போராட்டம் : பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் நிறுவனர் திருமலை எம் ரவி பார்க்கவன் அறிவிப்பு

திருச்சி லால்குடி செந்தமிழ்ச்செல்வி கொலை வழக்கு குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் மாபெரும் போராட்டம் : பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் நிறுவனர் திருமலை எம் ரவி பார்க்கவன் அறிவிப்பு

திருச்சி லால்குடி செந்தமிழ்ச்செல்வி கொலை வழக்கு குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் நிறுவனர் திருமலை எம் ரவி பார்க்கவன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவிப்பு திருச்சி லால்குடி தொகுதிக்கு உட்பட்ட சிறுகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச் செல்வி கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் நிறுவனர் திருமலை எம் ரவி பார்க்கவன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த முப்பத்திரண்டு வயதேயான செந்தமிழ்ச் செல்வி வீட்டுக்கு அருகில் உள்ள ஊறணிக்கு அருகில் மாட்டுச்சாலை அமைத்து பசுமாடுகள் வளர்த்து வந்தார் இந்த நிலையில் முதல் நாள் இரவு ஏழு மணிக்கு பால் கறக்க சென்றவர் மறுநாள் 30/06/2026 காலை பதினொரு மணியளவில் சடலமாக ஊறணியில் கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த படுகொலை சார்ந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கண்டுபிடிக்க முடியாதது எண்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட பார்க்கவ குல மக்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதால் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் மேலும் இருபத்தி ஒன்பது நாட்கள் கடந்த நிலையிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுத் தராவிட்டால் மாபெரும் போராட்டம் மற்றும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அரசு காவல்துறை நீதித்துறை ஊடக நண்பர்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்தி பார்க்கவ குல உடையார் மூப்பனார் நயினார் பெருமக்கள் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அறிக்கையின் மூலம் கேட்டுக்கொள்கிறேன். 25/06/2026 அன்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் அருகில் உள்ள தென்கடுக்கை கிராமத்தைச் சேர்ந்த பார்க்கவ குல மக்கள் ஐவரை பட்டாக்கத்தி வாள் போன்ற ஆயுதங்களால் வெட்டிய கயவர்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் இவர்களின் பாகுபாடற்ற தீவிர நடவடிக்கை காரணமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு மூவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவருக்கு குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது உள்ளபடியே வரவேற்கத்தக்கது போற்றுதலுக்குரியது. அதேபோல் சிறுகளப்பூர் செந்தமிழ்ச் செல்வி படுகொலை சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சிறுவயது குழந்தைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு ஜோசப் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் சார்பில் நிறுவனர் மற்றும் தலைவர் திரு திருமலை எம் ரவி பார்க்கவன் பிஏ அவர்கள் தெரிவித்துள்ளார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0