சங்கம் நடத்தி வந்த அன்னதான சேவைகளை மீண்டும் துவங்க கேரள அரசும், சபரிமலை தேவசம் போர்டும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் வலியுறுத்தல்

Aug 3, 2026 - 13:07
Aug 3, 2026 - 13:09
சங்கம் நடத்தி வந்த அன்னதான சேவைகளை மீண்டும் துவங்க கேரள அரசும், சபரிமலை தேவசம் போர்டும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் வலியுறுத்தல்

சங்கம் நடத்தி வந்த அன்னதான சேவைகளை மீண்டும் துவங்க கேரள அரசும், சபரிமலை தேவசம் போர்டும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் வலியுறுத்தல்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியனின் 2025 26 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டமும் தொண்டர்கள் பாராட்டு விழாவும் திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கௌரவத் தலைவர் எம் வி சபரிதாசன், மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ், துணை தலைவர்கள் முத்து, பாண்டியன், நடராஜன் மற்றும் இணைச் செயலாளர்கள் இளங்கோவன், சிதம்பரம் தர்மலிங்கம், ராதாகிருஷ்ணன், அலுவலக செயலாளர் அம்சராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய தலைவர் சங்கீத்குமார், தேசிய பொதுச் செயலாளர் அட்வகேட் விஜயகுமார், தமிழ் மாநில தலைவர் விஸ்வநாதன் தமிழ் மாநில செயலாளர் டாக்டர் ஐயப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல மத்திய, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் அறிக்கையும், பொருளாளர் அறிக்கையையும் கூட்டம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

பின்னர் நடைபெற்ற தொண்டர் பாராட்டு விழாவில் 55 கிளைகளைச் சார்ந்த 466 தொண்டர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில், சபரிமலையில் பல ஆண்டுகளாக சங்க தொண்டர்கள் மூலமாக செய்து வந்த ஸ்ட்ரெச்சர் சேவை பழைய படி சங்கத்திற்கு வழங்க வேண்டும். சங்கம் நடத்தி வந்த அன்னதான சேவைகளை மீண்டும் துவங்க கேரள அரசும், சபரிமலை தேவசம் போர்டும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 சபரிமலையில் பக்தர்கள் நீண்ட நேரம் கியூ வரிசையில் நிற்பதை தவிர்த்து திருப்பதியில் உள்ளது போல் பக்தர்கள் அமர்ந்து சென்று சாமி தரிசனம் செய்வதற்கு சபரிமலை தேவஸ்தான போர்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மணி நேரம் கியூ வரிசையில் நிற்கக்கூடிய பக்தர்களுக்கு சரியான முறையில் குடிநீரும் உணவும் வழங்கப்பட வேண்டும். விழாக்களங்களில் சபரிமலையில் பணி செய்ய வரக்கூடிய போலீஸ் ஐயப்பன் மார்கள் பக்தர்களிடம் கனிவுடன் மனிதநேயத்துடன் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். நிலக்கலிலிருந்து பம்பைக்கு அரசு பேருந்தில் வரக்கூடிய பக்தர்களுக்கு சரியான முறையில் க்யூ வரிசை ஏற்படுத்தி பேருந்தில் பயணிக்க உதவி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0