குழந்தைகளின் உரிமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Aug 6, 2026 - 13:27
Aug 6, 2026 - 13:31
குழந்தைகளின் உரிமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகளின் உரிமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி புத்தூரில் அமைந்துள்ள உதயம் – Capuchin Friars Minor Multipurpose Social Service Society (CFMMSSS) மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி, சமூகப்பணித்துறை இணைந்து "இளம் மனங்களை வலுப்படுத்துவோம் : குழந்தைகளின் உரிமைகள்" என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான சமூக அமைப்பு (Community Organisation) விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு உதயம் CFMMSSS இயக்குநர் அருட்தந்தை அமிர்தராஜ் OFM Cap தலைமை தாங்கினார். உதவி இயக்குநர் அருட்தந்தை டேனியல் தயாபரன் OFM Cap முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி உரிமை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் சட்டப் பாதுகாப்புகள் குறித்து மாணவர்களுக்கு பயனுள்ள விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, குழந்தைகளின் உரிமைகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் உதயம் CFMMSSS சமூகப்பணியாளர் ஜேக்கப் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பிற்கு உறுதுணையாக இருந்தார். இந்நிகழ்ச்சியை பிஷப் ஹீபர் கல்லூரி, சமூகப்பணித்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி ஐஸ்வர்யா ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0