திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பொறுப்பு : இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு அதிக அளவு பொறுப்புகள் வழங்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பொறுப்பு : இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு அதிக அளவு பொறுப்புகள் வழங்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
அதிமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுகவில் புதிய நிர்வாகிகள் தொடர்ந்து நியமிக்கப்பட்ட வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகர், மாவட்டம் அதிமுகவில் ஏற்கனவே மாவட்ட நிர்வாகிகள் அணி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக அதிமுக நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட உள்ளனர். அதன்படி திருச்சி மாநகர், மாவட்ட அதிமுகவில் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், மாணவர் அணி நிர்வாகிகள், இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை, இலக்கிய அணி நிர்வாகிகள் மற்றும் சிந்தாமணி மலைக்கோட்டை வடக்கு,தெற்கு காந்தி மார்க்கெட், கருமண்டபம், காஜாமலை, பொன்னகர், பாலக்கரை, வடக்கு, தெற்கு எடத்தெரு வடக்கு, தெற்கு, உறையூர் வடக்கு, தெற்கு தில்லைநகர் பகுதி, அண்ணா நகர் பகுதி, புத்தூர் பகுதி, சண்முக நகர் பகுதி மற்றும் புதிதாக வட்ட நிர்வாகிகள் சுமார் போரை நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சமீப காலமாக திருச்சி மாநகர், மாவட்ட அதிமுகவில் நிர்வாகிகள் த. வெ.க கட்சிக்கு சென்ற நிலையில் புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அதிமுக நிர்வாகிகளிடையே புது ரத்தம் பாய்ச்சப்பட்டு புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்து அறிவித்துள்ளார் இதன் மூலம் திருச்சி மாநகரில் அதிமுகவினர் புது பொழிவுடன் பலத்துடன் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். புதிய நிர்வாகிகளில் பெரும்பாலான இளைஞர் இளம் பெண்களுக்கு அதிக அளவு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
1