திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய "மொரைஸ் கார்னிவல்" : பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

Aug 15, 2026 - 13:05
Aug 15, 2026 - 13:07
திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய  "மொரைஸ் கார்னிவல்" : பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய "மொரைஸ் கார்னிவல்" : பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருச்சி மொரைஸ் சிட்டியில் ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களுக்கு "மொரைஸ் கார்னிவல்" திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளான நேற்று (ஆகஸ்ட் 14), மொரைஸ் சிட்டி நிர்வாக இயக்குநர் லெரோன் மொரைஸ் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ரியோ ராஜ் மற்றும் நடிகை பிரார்த்தனா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். இரண்டாம் நாளான இன்று (ஆக.15) பிரபல பின்னணிப் பாடகர் ஷ்யாம் விஷால் மற்றும் சரத் மேத்யூ ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மூன்றாம் நாளான நாளை (ஆக.16) விஜய் டிவி புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் மதுரை முத்து கலந்து கொள்ள உள்ளார். இந்த மூன்று நாள் திருவிழாவில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் மேஜிக் ஷோ, மிமிக்ரி, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள். கரகாட்டம், சிலம்பாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 50-க்கும் மேற்பட்ட உணவு வகைகள், வணிகம் மற்றும் ஃபேஷன் (Fashion) சார்ந்த அரங்குகள். பார்வையாளர்களின் பார்வைக்காகப் பிரத்யேக ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் கார்கள் இடம் பெற்றுள்ளன. சிறுவர்கள் மகிழ்ச்சியாக விளையாட மூன்று நாட்களும் பிரத்யேக விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கான அனுமதி முற்றிலும் இலவசம் ஆகும். குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு மகிழுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0