தொடர்ச்சியாக 5 மணிநேரம் 5 நிமிடங்கள் தலைகீழாக சிரசாசன நிலையில் நின்று சோழன் உலக சாதனை படைத்த 61வயது முதியவர் குகனந்தராசா

Oct 7, 2025 - 12:49

மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறு மூலையில் வசித்து வருபவர் குகனந்தராசா (61) வயது. இன்றைய காலப்பகுதியில் அனைவரும் யோகாசனப் பயிற்சிகள் செய்வதன் முக்கியத்தும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் தொடர்ந்து ஐந்து மணிநேரம் சிரசாசன நிலையில் நின்று சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிய வைத்தார். இதற்கான நிகழ்வானது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் மருத்துவர் இளையதம்பி ஸ்ரீநாத் முன்னிலையில் வந்தாறுமூலையில் வைத்து நடைபெற்றது. அதிகாலை 4:01 மணிக்கு உலக சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்ட குகனந்தராசா காலை 9:06 மணிவரை தலைகீழாக தனது உடலை சிரசான நிலையில் சமநிலையில் வைத்திருந்தார். உலக சாதனை படைத்த குகனந்தராசாவிற்கு தங்கப் பதக்கம், சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் மருத்துவர் இளையதம்பி ஸ்ரீநாத் போன்றோரினால் வழங்கிப் பாராட்டப்பட்டது. சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வை கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0