திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பார்த்தீனியம் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி

Aug 21, 2026 - 20:26
Aug 21, 2026 - 20:28
திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பார்த்தீனியம் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி

திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பார்த்தீனியம் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி

திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சிறுகமணி சேவை சாந்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாணவர்களுக்கு பார்த்தீனியம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ந.புனிதவதி துவக்கி வைத்து பார்த்தீனியம் களையை கண்டறிதல் மற்றும் பார்த்தீனியத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தார். இணைப்பேராசிரியர் முனைவர் செ.ராதிகா பார்த்தீனியம் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்து விரிவாக துறைக்கு செயல் விளக்கம் அளித்தார். மேலும் அவர்கள் பேசுகையில், பார்த்தீனியம் மிகவும் வேகமாக விதை மூலம் பரவும் ஆக்கிரமிப்பு களையாகும். இது வேளாண்மையில் பயிர்களின் வளர்ச்சியையும் மகசூலையும் பாதிப்பதுடன், மனிதர்களுக்கு தோல் அரிப்பு, ஒவ்வாமை, ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. மேலும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களை பாதித்து சுற்றுச்சூழல் சமநிலையையும் சீர்குலைக்கிறது. பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த பூக்கும் முன்பே செடிகளை வேரோடு பிடுங்கி அகற்ற வேண்டும். அகற்றும் போது கையுறை, முகக்கவசம் மற்றும் காலணிகளை பயன்படுத்துவது அவசியம். அகற்றிய செடிகளை பாதுகாப்பான முறையில் குழியில் புதைக்கவோ அல்லது உரிய முறையில் அழிக்கவோ வேண்டும். அல்லது உரிய முறையில் மக்க வைத்து உரமாக பயன்படுத்தலாம். பயிர் இல்லாத இடங்களில் பரிந்துரைக்கப்பட்ட களைக்கொல்லிகளை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். மேலும், மெக்சிகன் வண்டு என்ற உயிரியல் கட்டுப்பாட்டு பார்த்தீனியத்தின் வளர்ச்சியை இயற்கையாகக் கட்டுப்படுத்த உதவுகிறது எனவும் விளக்கம் அளித்தனர்.

 பார்த்தீனியம் விழிப்புணர்வு குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் பார்த்தீனியம் விழிப்புணர்வு குறித்த பதாகைகளுடன் பேரணி மேற்கொண்டனர்.

 இப்பேரணியை சேவை சாந்தி மெட்ரிக் பள்ளியின் முதன்மையர் திருமதி சித்ரா தொடங்கி வைத்தார். இதில் 90 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0