திருச்சி இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கம்

Oct 7, 2025 - 15:49
திருச்சி இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கம்

திருச்சி இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கம்

திருச்சி இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் “மன அழுத்தமும் மன அமைதியும்: விழிப்புணர்வான எதிர்காலத்திற்கான பயணம்” என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் நோக்கம், இன்றைய வேகமான வாழ்க்கை முறைமையில் மன நலன் மற்றும் மனச்சாந்தி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்நிகழ்ச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜி. இராஜசேகரன் தலைமை உரையாற்றி, மாணவர்களின் மனநல வளர்ச்சிக்கும் உணர்ச்சி சமநிலைக்கும் கல்வி வழங்கும் முக்கிய பங்கை வலியுறுத்தினார். பின்னர், இயக்குனர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு உரையாற்றி, மனச்சாந்தி மற்றும் மன அழுத்தமற்ற வாழ்க்கையை ஊக்குவிக்கும் இத்தகைய அர்த்தமுள்ள கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்ததற்காக பாராட்டுத் தெரிவித்தார். பதிவாளர் டாக்டர் எம். அனுசூயா நிகழ்ச்சி கண்ணோட்டத்தை வழங்கி, கருத்தரங்கத்தின் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பலன்களை விளக்கினார். இந்நிகழ்வின் வள நிபுணராக நார்வே நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆரே ஹோலென், நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நடத்தை மருத்துவப் பேராசிரியர் மற்றும் ACEM யோகா பள்ளியின் நிறுவனர், சிறப்புரையாற்றினார். பேராசிரியர் கல்பனா, பேராசிரியர் ஜெயராய் மற்றும் பேராசிரியர் மோகன் ஆகியோரும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். “மன அழுத்தமும் மன அமைதியும்: விழிப்புணர்வான எதிர்காலத்திற்கான பயணம்”. என்ற தலைப்பில் வள நிபுணராக உரையாற்றி, மன அழுத்த மேலாண்மைக்கு நடைமுறை வழிமுறைகள், தியானத்தின் சக்தி மற்றும் விழிப்புணர்வு மூலம் உட்புற அமைதியை வளர்த்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார். அவர் மன அழுத்தம் உடல் உறுப்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தின்மீது ஏற்படுத்தும் விளைவுகளை விரிவாக விளக்கினார். மேலும் உத்வேக நரம்பியல் மண்டலம் (sympathetic) மற்றும் அமைதி நரம்பியல் மண்டலம் (parasympathetic) ஆகியவற்றின் செயல்பாடுகளை விளக்கக் கூடிய விளக்கப்படங்களையும் பயன்படுத்தினார். அவர் யோகா, தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி போன்ற மனஅழுத்த நிவாரண முறைகள் குறித்து எடுத்துரைத்து, அவை எவ்வாறு முக்கிய உடல் உறுப்புகள், நரம்பு மண்டலம் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகின்றன என தெரிவித்தார். மேலும், அவர் தன்னுடைய f-MRI மற்றும் EEG ஆராய்ச்சி முடிவுகளை பகிர்ந்து, தியானத்தின் பல்வேறு வடிவங்களில் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை விளக்கினார். ஆலையட் ஹெல்த் சயின்ஸ், இன்ஜினியரிங், நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்ஸ், நர்சிங் போன்ற பல கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்று பலனடைந்தனர். நர்சிங் கல்லூரி மாணவர்கள் தலைமை விருந்தினரை வரவேற்று அறிமுகப்படுத்தியதுடன், நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி உரையையும் வழங்கினர். இந்நிகழ்ச்சி சிறப்பாக டாக்டர் கே. சித்ரா தேவி (முதல்வர், ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்ஸ்), டாக்டர் டி. ஸ்ரீராம், டாக்டர் ஆர். பரத் குமார், மற்றும் டாக்டர் ப. வரலக்ஷ்மி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0