தேசிய விளையாட்டு தினம் தூத்துக்குடி பள்ளி மாணவன் திருச்சியில் இரண்டு புதிய உலக சாதனை : ஜெட்லி 2 உலக சாதனை சான்றிதழ் வழங்கி பாராட்டினர்

Aug 30, 2026 - 20:58
Aug 30, 2026 - 21:01
தேசிய விளையாட்டு தினம் தூத்துக்குடி பள்ளி மாணவன் திருச்சியில் இரண்டு புதிய உலக சாதனை : ஜெட்லி 2 உலக சாதனை சான்றிதழ் வழங்கி பாராட்டினர்

தேசிய விளையாட்டு தினம் தூத்துக்குடி பள்ளி மாணவன் திருச்சியில் இரண்டு புதிய உலக சாதனை : ஜெட்லி 2 உலக சாதனை சான்றிதழ் வழங்கி பாராட்டினர்

தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட அமிர்த பிரவீன் சித்ரா தம்பதியரின் இளைய மகன் செருபின் செருபாபேல். விகாச பள்ளியில் பயின்று வரும் இந்த சிறுவன் விளையாட்டில் ஆர்வம் காட்டினார். இதையடுத்து பெற்றோர் அவனுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு 60 மீட்டர் தூரத்தை மாணவன் செருபின் செருபாபேல் 10.59 வினாடிகளில் அதிவேகமாக ஓடி இரண்டு புதிய உலக சாதனைகள் புரிந்தார்.

 அதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ரெக்கார்ட்ஸ் இந்தியா அகாடமி நிறுவனர் - பிரபல கின்னஸ் உலக சாதனையாளர் டிராகன் ஜெட்லீ நேரில் ஆய்வு செய்து 2 புதிய உலக சாதனையை அறிவித்து தலா 2 உலக சாதனை சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினார். இந்தியன் சூப்பர் ஹிட் என்ற வரிசையில் இது இந்திய சிறுவர்களின் விளையாட்டில் புதிய மைல் கல் மற்றும் உலக சாதனையாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் 5 வயதிற்குள் 93 வகையான திறமைகள் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதனை சரியாக கண்டறிந்து உலக சாதனையாக மாற்றிய பெருமை அந்த சிறுவனின் பெற்றோரை சாரும் என விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0