லயன்ஸ் தொலைநோக்குப் பொறியாளர் விருது – 2026 வழங்கும் விழா
லயன்ஸ் தொலைநோக்குப் பொறியாளர் விருது – 2026 வழங்கும் விழா
லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில் லயன்ஸ் தொலைநோக்குப் பொறியாளர் விருது – 2026 வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் கட்டிட பொறியாளர் என போற்றப்படும் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் இந்த நாள் பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இந்திய பொறியியலின் தந்தை என அறியப்படுகிறார். காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணையை கட்டினார். அப்போதைய ஆசியாவில் அது மிகப்பெரிய அணையாக அமைந்தது. இவருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது. சர் எம்.வி என அழைக்கப்பட்டுள்ளார். 1968 முதல் அவரது பிறந்தநாளை இந்திய நாடு பொறியாளர் தினமாக கொண்டாடி வருகிறது.
பொறியாளர் தினத்தை முன்னிட்டு லயன்ஸ் தொலைநோக்குப் பொறியாளர் விருது 2026 வழங்கும் விழா லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசனத் தலைவர் லயன் பேராசிரியர் எஸ். ஹேமலதா தலைமை வகித்தார். சங்க சாசனச் செயலாளர் லயன் யோகா ஆசிரியர். பெ.விஜயகுமார், சாசனப் பொருளாளர் லயன் எம். முகமது ஹயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் மாவட்டம் 3242F – மண்டலம்-1 தலைவர் முகமது ஷபி, வட்டாரம் - 1A தலைவர் லயன் சரவணன், திருச்சிராப்பள்ளி ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த லயன் பிரபுகுமார் உள்ளிட்டோம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொறியியல் துறையில் புதுமை, அர்ப்பணிப்பு மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டும் வகையில் ஹரி பிரசாத்திற்கு “லயன்ஸ் தொலைநோக்குப் பொறியாளர் விருது – 2026”வழங்கினர். பொறியியல் துறையில் புதுமை, அர்ப்பணிப்பு மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் லயன் கணேசன், லயன் சுதாகர், லயன் மகேஸ்வரி, லயன் கந்தசாமி, லயன் விக்னேஷ், லயன் திரவிய கிளாடினா, லயன் ராகவேந்திரன், லயன் ஆனந்த கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0