குடி மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Sep 25, 2026 - 17:50
குடி மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடி மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப்பணித் துறை மற்றும் உதயம் பல்நோக்கு சேவை மையம் – திருச்சி இணைந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியின் மூலம் குடி மற்றும் போதைப் பழக்கத்தால் ஏற்படும் உடல், மன, குடும்ப மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாகச் சென்று மாணவர்கள் துண்டுப் பிரசுர விநியோகம் செய்தனர். மேலும், போதைப் பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான வாழ்க்கையை மேற்கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை அருட்தந்தை I.டேனியல் தயபாரன், OFM, Cap.,துணை இயக்குநர், உதயம் (CFMMSSS) மற்றும் பொருளாளர் தொடங்கி வைத்தவர். மாணவர்களை முன்நின்று வழி நடத்தியவர் குழு ஆலோசகர் முனைவர் Dr. M. கபிரியேல், இணைப் பேராசிரியர் சமூகப்பணித் துறை பிஷப் ஹீபர் கல்லூரி திருச்சிராப்பள்ளி. M. பாரதி மோகன், திட்ட மேலாளர், KLA, திருச்சி தங்களின் விழிப்புணர்வு கருத்தை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர் குடியிருப்பு மக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள், கலந்து கொண்டு, குடி மற்றும் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பெற்றுக் கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0