திருச்சி இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா மற்றும் கவியரங்கம்
திருச்சி இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா மற்றும் கவியரங்கம்
திருச்சி இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதி பாவாணர் செந்தமிழ் வானம், திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கம் மற்றும் பாவேந்தர் பைந்தமிழ் மன்றம் ஆகியவை இணைந்து, காவியத் தலைவன் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, “நான் நிரந்தரமானவன்” என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கம் நடைபெற்றது. இக்கவியரங்கத்திற்கு பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பட்ட ஆய்வாளர் கவிஞர் சு. சோலைராஜா தலைமை தாங்கினார். திருச்சி இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் மா. சங்கீதா முன்னிலை வகித்தார்.
இக்கவியரத்திற்கு சிறப்பு விருந்தினராக இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் க. இராஜசேகரன் கலந்து கொண்டு கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து முனைவர் சு. ஆ. பழனிச்சாமி, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர் ப.கு. சந்துரு, நிறுவனர், கலைச்சாரல் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கமம், கவிஞர் முத்துவேலு பிரின்ஸ் ராமு, நிறுவனர், தாய்மொழி உறவுகள் குழுமம், புலவர் பா. அனிதா, தலைவர், அகத்தியர் தமிழ்ச் சங்கம், இராஜபாளையம்; கவிஞர் நா. சுபாஷினி, யோகா ஆசிரியர், திருச்சி; கவிஞர் கோகுல் காளியப்பன், நிறுவனர், கவித்தேடல் பதிப்பகம், தருமபுரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.
இக்கவியரங்கத் தொடக்க விழாவில் பாவலர் இரா. பானுமதி அவர்கள் எழுதிய மனமாளும் மலர்கள் – வாழ்வியல் கட்டுரைகள். பாவலர் ஆ. முத்தரசி எழுதிய பானாங்குளம் வட்டாரச் செவி வழிக் கதைகள். முனைவர் மா. சங்கீதா எழுதிய செயற்கை நுண்ணறிவும் மனித வாழ்வும். பாரதி பிரவீன் எழுதிய வறுமை தந்த பரிசு. சக்தி எழுதிய பாமரன் வரிகள் ஆகிய 5 அச்சு நூல்கள் வெளியிடப்பட்டன. அதனை தொடர்ந்து பாவலர் இரா. பானுமதி எழுதிய மனிதனாக மாறு கவிதைத் தொகுப்பு. முனைவர் வசந்தி ராமன் எழுதிய என்னுள் எழுந்த கவிதைகள். பாவலர் தி. மீரா எழுதிய செந்தமிழ் சாரல்கள். கவிஞர் பெ. அபிராமி எழுதிய முகமூடி கவிதை நூல். கவிஞர் கி. சுகன்யா எழுதிய வார்த்தைக்குள் ஓர் வசந்தம் எனும் பொருண்மையில் நளினம் கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. கவியரங்கில் புதுக்கவிதை வாசித்த கவிஞர் பெருமக்களுக்கு “கவிநிலா” விருதும், மரபுக் கவிஞர்களுக்கு “மரபுக் கவி நிலா” விருதும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டன. மேலும் அனைத்து கவிஞர்களும் , “நான் நிரந்தரமானவன்” எனும் தலைப்பில் எழுதிய கவிதைத் தொகுப்பு நூல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். இக்கவியரங்கம் மரபுக் கவியரங்கம், புதுக்கவியரங்கம் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. மரபுக் கவியரங்கில் கலி வெண்பா, விருத்தப்பா ஆகிய வகைகளில் 27 மரபு கவிதைகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற புதுக்கவியரங்கில் 10 அமர்வுகளில் 97 கவிதைகள் வாசிக்கப்பட்டன. மொத்தம் 13 அமர்வுகளில் 124 கவிஞர்கள் தங்களது கவிதைகளை அரங்கேற்றிச் சிறப்பித்தனர். இக்கவியரங்கின் ஒருங்கிணைப்பாளர்களாகக் கவிஞர் மோ. நாகார்ஜூனன், உதவிப் பேராசிரியர் கரூர், வரவேற்புரை வழங்கினார். முனைவர் ப. மணிகண்டன், இணைப் பேராசிரியர் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டனர். பாவலர் முத்தரசி நன்றி கூறினார். பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் நிறுவனர் இசக்கி தேவி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழக அரசின் தூயத் தமிழ் பற்றாளர் சு. சோலை ராஜா ஏற்புரை வழங்கினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0