அரசு துறைகளில் பணியாற்றும் பட்டியல்/பழங்குடியினர் இன ஊழியர்களுக்கு 16/4 A விதிமுறைகள் மூலம் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் : அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் தீர்மானம்

Sep 30, 2026 - 14:07

அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு மாநிலத் தலைவர் முனைவர் சி.மனோகரன் தலைமையிலும், மாநில செயல் தலைவர் பெருஞ்சித்திரன், மாநில அமைப்புச்செயலாளர்கள் சுப்ரமணி, அன்பழகன், மாநிலத் துணைத்தலைவர் செல்லதுரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பணிநிறைவு பெற்ற பெருஞ்சித்திரன், சுப்பிரமணி, அன்பழகன் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஜெயராம் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். கூட்டத்தில் கடந்த மே -2026 ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை படைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு பாராட்டுக்களை யும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ப.ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்களுக்கும் வாழ்த்துக்களை யும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. நடந்து முடிந்த ஆசிரியர்கள் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உள்ளது போல் தமிழ்நாடு அரசு துறைகளில் பணியாற்றும் பட்டியல்/பழங்குடியினர் இன ஊழியர்களுக்கு 16/4 A விதிமுறைகள் மூலம் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பணி தவிர பிற பணிகள் வழங்குவதை முற்றிலும் கைவிட வேண்டும். அரசு பணிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். SC/ST பிரிவில் காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களை யும் (Backlog Vacancy) உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னதாக மாநில துணை பொதுச் செயலாளர்கள் தமிழ்முதல்வன் (எ) முனுசாமி வரவேற்பு உரை ஆற்ற, குப்புசாமி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0