உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான காலணி வீச்சு சம்பவத்தைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Oct 9, 2025 - 21:18
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான காலணி வீச்சு சம்பவத்தைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான காலணி வீச்சு சம்பவத்தைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய வழக்கறிஞர்கள் ஜனநாயக பேரவை சார்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நுழைவாயில் முன்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்கள் மீது காலணி எறிந்த அசிங்கம் மற்றும் மிகவும் அநாகரிகமான கொடூர கடுஞ்செயலுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்தகைய செயல் நீதித்துறையின் மாண்பையும், ஜனநாயகத்தின் மதிப்புகளையும் கொச்சைபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தச் அநாகரீகமான கொடுஞ்செயலை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தின் நுழைவாயில் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நிர்வாக குழு தலைவரும் மற்றும் மேற்படி பேரவையின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் ஜே. பிரிசில்லா பாண்டியன் தலைமையில் நடத்தப்பட்டது. நீதித்துறையின் கண்ணியத்தைக் காப்பதற்கும், இத்தகைய வன்முறை மற்றும் அநாகரீகமான செயல்களை எதிர்ப்பதற்கும் அகில இந்திய வழக்கறிஞர்கள் ஜனநாயக பேரவை அமைப்பு உறுதியுடன் என்றென்றும் போராடிவருகிறது. இச்செயலில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர் குற்றவாளிக்கு இவ் அநாகரீகமான நடத்தைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஸ்.எ) கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், உரிய தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், இந்நாள் நம் நீதித்துறை வரலாற்றின் ஒரு கருப்பு நாள் எனவும், இக்குற்றவாளி வழக்கறிஞர் மேற்படி செயலுக்காக மன்னிப்புக்கூட கேட்க மறுப்பது சட்ட சகோதரத்துவத்திற்கு ஒரு பெரிய அவமானம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு கேடு எனவும், வரும் காலங்களில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி மதுரை, சென்னை திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் என தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெருந்திரளான மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தீவிர மூழக்கங்கள் மூலமாக தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0