திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் முன் வளர்ப்பு மையம் அமைக்க அனுமதி

Oct 12, 2025 - 21:00
திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் முன் வளர்ப்பு மையம் அமைக்க அனுமதி

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் முன் வளர்ப்பு மையம் அமைக்க அனுமதி

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி StartupTN (Tamil Nadu Startup and Innovation Mission) அமைப்பின் StartupTN முன்–வளர்ப்பு மையத் திட்டத்தின் கீழ் ஒரு முன் வளர்ப்பு மையம் (Pre–Incubation Centre) அமைப்பதற்கான இறுதி அனுமதி ஆணையை (Final Sanction Order) பெற்றுள்ளது. இந்த ஆணை 9.10.2025 மற்றும் 10.10.2025 அன்று கோவையில் கொடிசியா வணிக மையத்தில் நடைபெற்ற "ஸ்டார்ட் அப் தமிழ்நாடு குளோபல் சம்மிட் 2025" என்னும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் செயலர் ஜி. இராஜசேகரன் மற்றும் இயக்குனர். முனைவர். ஜி . பாலகிருஷ்ணன் அவர்களின் தொடர் ஆதரவும் வழிகாட்டுதலும் இத்திட்டம் வெற்றிகரமாக அமையவும் இந்த ஆணையை பெற உதவியாகவும் இருந்தது. இந்த முன் வளர்ப்பு மையத்திற்கு முனைவர். M.அனுசியா பதிவாளர் திட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். இந்த அனுமதி, மொத்தம் ₹22.50 லட்சம் நிதி ஆதரவை கொண்டுள்ளது. இது, கல்வி நிறுவனத்தின் புதுமை, தொழில் முனைவு மற்றும் ஸ்டார்ட்அப் சூழல் மேம்பாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கான ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இந்த சாதனையில் ஆராய்ச்சி குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் கே. சித்ராதேவி, டாக்டர் டி. ஸ்ரீராம், டாக்டர் ஆர். பாரத் குமார், மற்றும் டாக்டர் ப. வரலக்ஷ்மி அவர்களின் முக்கிய பங்களிப்பு பதிவு செய்யப்படுகிறது.

அவர்களின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு இத்திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முக்கிய பங்காற்றியது. புதிய முன்–வளர்ப்பு மையம் இளைஞர் புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டு தளமாக செயல்படும். இது வழிகாட்டுதல் (Mentorship), அடிப்படை வசதிகள் (Infrastructure), மற்றும் தேவையான வளங்களை வழங்கி, புதுமையான யோசனைகளை பயனுள்ள தொழில்முயற்சிகளாக மாற்ற உதவும். மேலும், இன்றைய குளோபல் சம்மிட் நிகழ்வின்போது அளிக்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக டாக்டர் பி. பாபு மற்றும் டி. பவித்ரா அவர்களின் பங்களிப்பு பதிவு செய்யப்படுகிறது. அத்துடன், இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த மொத்தம் 50 மாணவர்கள் இச்சம்மிட்டில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்கள் செயலில் ஈடுபட்டு, நாளின் சிறப்பை மேலும் உயர்த்தினர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0