திருச்சியில் இரும்பு வியாபார யிடம் ரூ பல லட்சம் மோசடி : சேலம் இரும்பு ஆலை மேலாளர் மீது புகார்

Oct 26, 2025 - 14:46
திருச்சியில் இரும்பு வியாபார யிடம் ரூ பல லட்சம் மோசடி : சேலம் இரும்பு ஆலை மேலாளர் மீது புகார்

திருச்சியில் இரும்பு வியாபார யிடம் ரூ பல லட்சம் மோசடி : சேலம் இரும்பு ஆலை மேலாளர் மீது புகார்

திருச்சி விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் பெரிய நிறுவனங்களில் இரும்புகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் இணையதளத்தில் பார்த்த போது சேலத்தை சேர்ந்த ஒரு இரும்பு கம்பெனி இரும்புகளை ஏலம் விடுவதாக அறிந்து அந்த கம்பெனி மேலாளரிடம் இளங்கோவன் பேசியுள்ளார். இதையடுத்து இளங்கோவன் தனது நண்பர்களுடன் சேலத்திற்கு சென்று இரும்பு தொழிற்சாலையை பார்த்துவிட்டு அவரிடம் 81 டன் இரும்பை ஏலத்துக்கு எடுக்க முடிவு செய்தார். பிறகு அவரிடம் பேசி முடிவு எடுத்து 81 டன் இரும்புக்கான பணம் ரூபாய் 49 லட்சத்து 45 ஆயிரத்து 982பணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் இரும்பு கம்பெனி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையை சேர்ந்த மேலாளர் இளங்கோவனுக்கு லாரிமூலம் இரும்புகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து அந்த இரும்புகளை இளங்கோவன் எடை போட்டு பரிசோதனை செய்த போது 41, 580 டன்கள் மட்டுமே இருந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ 19 லட்சத்து 78 ஆயிரத்து 388 ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் உடனடியாக சேலத்தை சேர்ந்த இரும்பு கம்பெனி மேலாளரிடம் கேட்டபோது அவர் இளங்கோவனிடம் தகராறு செய்து மீதி பணத்தை தரமாட்டேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து இளங்கோவன் தன்னை ஏமாற்றிய சேலம் இரும்பு கம்பெனியின் மேலாளர் மீதுநடவடிக்கை எடுக்க கோரி திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இரும்பு கம்பெனி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் சேலத்தைச் சேர்ந்த இரும்பு கம்பெனி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0