சோழர்கால நாணயங்கள் குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

Nov 6, 2025 - 17:08
சோழர்கால நாணயங்கள் குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

சோழர்கால நாணயங்கள் குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சோழர் கால நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் துவக்க உரையாற்றினார். செயலர் குணசேகரன், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் திருச்சி முகமது சுபேர், சென்னை காயின் கிளப் தலைவர் மணிகண்டன், கோவை பாலு, தஞ்சை சையது மீரான், கரூர் சந்துரு, துறையூர் பெரியசாமி, பொள்ளாச்சி மணிகண்ட பிரபு, லட்சுமி நாராயணன், இளம்வழுதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீராஜராஜ என்ற தேவநாகரி எழுத்துக்கள் பொறித்த ராஜராஜ சோழ நாணயங்கள் குறித்து சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் கிருஷ்ணகிரி மதன் சிறப்புரையாற்றினார். முன்னதாக சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் வரவேற்க, நிறைவாக மன்சூர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர், ஸ்ரீரங்கம் கார்த்திகேயன், தஞ்சை முகமது பைசல், திருப்பத்தூர் மகேஷ் விஜய், ஹீராலால், தஞ்சை அப்துல் ரஹும் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0