திருச்சியில் மயங்கி விழுந்து முதியவர் சாவு : போலீசார் விசாரணை

Nov 9, 2025 - 17:45
Nov 9, 2025 - 18:36
திருச்சியில்  மயங்கி விழுந்து முதியவர் சாவு : போலீசார் விசாரணை

திருச்சியில் மயங்கி விழுந்து முதியவர் சாவு : போலீசார் விசாரணை

திருச்சி ரெயில்வே ஜங்ஷன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோ- அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் கௌதம் பாபு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0