சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் : முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக கூட்டத்தில் தீர்மானம்
சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் : முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக கூட்டத்தில் தீர்மானம்
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக திருச்சி மாநகர செயற்குழு கூட்டம் உறையூரில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் அல்லா பிச்சை, மாநில தலைமை கழக செயலாளர் சாதிக்கான், நகர தலைவர் ஜாகீர் கான் மற்றும் நிர்வாகிகள் முபின், ஹபீப் முகமது. பொருளாளர் முஸ்தபா, சபி, மஜீத், ஜவகர், பீர்முகமது. இப்ராஹிம். பயாஸ், பாஷா ஆரி ஃபுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தில் அரியமங்கலம், காமராஜ நகர் மலையப்ப நகர் ஆகிய பகுதிகளில் 40, 50 ஆண்டுகளாக கிரையம் செய்த வீட்டுமனையில் வீடு கட்டி மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் 5000 சர்வே நம்பர்களில் உள்ள இஸ்லாமிய மக்களின் பெயர்கள் அரியமங்கலம் பகுதி செட்டில்மெண்ட் என்ற பெயரில் நகர நில அளவை பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை விற்பனை செய்ய பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். எனவே உடனடியாக அந்த மக்களின் பெயர்களை நகர நல அளவை பதி வேட்டில் சேர்ப்பதோடு பட்டா வழங்க ஆணையிடு மாறு கேட்டு கொள்கிறோம். சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0