எஸ்.ஐ ஆர். விவகாரத்தில் விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள் : திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க விழாவில் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பேச்சு
எஸ்.ஐ ஆர். விவகாரத்தில் விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள் : திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க விழாவில் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பேச்சு
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் 16ம் ஆண்டு தொடக்க விழா திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அவைத்தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவன தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார், அப்போது இன்றைய சூழ்நிலையில், எஸ் ஐ ஆர் குறித்து நாம் விழிப்புடன் செயல்பட்டு, நமக்கான வாக்குரிமையை புதுப்பித்து கொள்ள வேண்டும். மேலும் நமக்கு அருகில் இருப்பவர்களுக்கும் அதனை தெளிவு படுத்தி, வாக்குரிமையை புதுப்பிக்க உதவிட வேண்டும். அப்படி செய்ய தவறினால், நாம் நமது இந்திய குடியுரிமையை இழந்து விடுவோம், எனவே இதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றார். விழாவில் மாநில பொது செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேசன் வாழ்த்துரை வழங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் அடைக்கல ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் ஜோஸ்வா ஜெயக்குமார் ஆரம்ப ஜெபத்துடன் நிகழ்வை தொடங்கி வைக்க மாவட்ட சி எஸ் ஐ பொறுப்பாளர் தேவதாஸ் சாமுவேல் இறைவார்த்தையை வாசித்தார். அருட்தந்தை செல்வ ஜெயமணி, ரெவரண்ட் சகரியா கிருபாகரன், ரெவரண்ட் சார்லஸ், தன்னம்பிக்கை பேச்சாளர் எலிசபெத் மார்கிரேட் மேரி, போதகர் ஜெயரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொது செயலாளர் ஏற்பாட்டில் 15 வருடங்களாக இயக்கம் கடந்து வந்த பாதையை தொகுத்து குறும்படம் காண்பிக்கப்பட்டது. மாவட்ட பெந்தகோஸ்து பொறுப்பாளர் பொன்பிரிட்டோ இறுதி ஜெபம் செய்தார். மாவட்ட பொருளாளர் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார். கூட்ட நிகழ்வுகளை மாவட்ட துணை அவைத்தலைவர் வாசுகி அமலா நெறிபடுத்தினார். அவைத்துணை தலைவர்கள் டாக்டர் ஏனோக் மதுரம், போதகர்.ஸ்டீபன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தன்ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வி, லூயிஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமிர்தராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜான் பிரகாஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் மணிமேகலை, மாவட்ட ஐடி விங் செயலாளர் ஜூலி, மாவட்ட ஆர் சி. பொறுப்பாளர் ஹென்றி வளையாபதி, மாவட்ட டி இ எல் சி பொறுப்பாளர் ஜான் பாஸ்கர், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் தாமஸ், தொகுதி செயலாளர்கள் கனகராஜ், மைக்கேல் ஆல்பர்ட் மற்றும் மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் போஸ்கோ, தினகரன், ஆல்பர்ட், ஜேம்ஸ், மணப்பாறையின் ஒன்றிய செயலாளர்கள் இன்னாசியார், தாமஸ் அற்புத ராஜ், மரியராஜ், ஜெனிபர், வட்ட செயலாளர்கள் குமார், மணி, ரோமியோ, பெல்லார்மின், ஜெரால்டு, ஆரோக்கியராஜ், ஸ்டீபன் ராஜ், மேத்யூ, நெல்சன், கிளமெண்ட் ஆண்டனி, ஸ்டாலின் சேவியர், அமலன், ஆரோக்கியநாதன், எட்வர்டு, ஸ்டீபன் சகாயராஜ், உறையூர் ஜேம்ஸ், எடமலைப்பட்டி புதூர் சேவியர் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட அரங்கினை சி.எஸ்.ஐ. வழக்கறிஞர் தாமஸ் குழுவினரும், கூட்டத்தின் அனைத்து நிகழ்வுகளை மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் செய்திருந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0