சௌராஷ்டிரா வாலிபர் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்

Dec 1, 2025 - 14:15
Dec 1, 2025 - 14:16
சௌராஷ்டிரா வாலிபர் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்

சௌராஷ்டிரா வாலிபர் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்

திருச்சிராப்பள்ளி சௌராஷ்டிரா வாலிபர் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் தையல்காரர் தெருவில் உள்ள கீர்த்தனா திருமண மண்டபத்தில் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் அம்சராம் வரவேற்புரை ஆற்ற, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வழக்கறிஞர் சுதர்சன் முகாமை துவக்கி வைத்தார். சமூகப் பெரியோர்கள் வரத்தாச்சாரி, பேராசிரியர் ரெங்கநாதன், ரமேஷ் பாபு, பெருமாள் அகியோர் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் சங்க நிர்வாகிகள் துணைச்செயலாளர்கள். வெங்கடேஷ், ராமன், துணைத்தலைவர் வினோத், இயக்குனர் சீனிவாசன் மறறும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முகாமில் 225 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 30 பேர் அறுவை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முடிவில் சங்க பொருளாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0