திருச்சியில் சத்தியம் அறக்கட்டளை சார்பாக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா

Dec 3, 2025 - 17:05
திருச்சியில் சத்தியம் அறக்கட்டளை சார்பாக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா

திருச்சியில் சத்தியம் அறக்கட்டளை சார்பாக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா

திருச்சியில் சத்தியம் அறக்கட்டளை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு சத்தியம் அறக்கட்டளை நிறுவனர் கே. அம்மாவாசை தலைமை தாங்கினார்.சமூக சேவகி எச் மோகனப்பிரியா வரவேற்புரையாற்றினார். குழந்தைகள் நல மருத்துவர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் எஸ் பத்மபிரியா குத்துவிளக்கு ஏற்றினார். சிறப்பு விருந்தாளராக தில்லை நகர் கௌரி கணேசன் உணவகம் உரிமையாளர் ஜி. பிரேம் குமார் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டாக்டர் பார்த்திபன் புருஷோத்தமன், ராமஜெயம் உணவகம் மேலாளர் ஆர் பிரபாகரன், எஸ்பிஎஸ் உணவக உரிமையாளர் எஸ்பிஎஸ் முத்துசாமி, கண்ணப்பா உணவக உரிமையாளர் எம் கண்ணன், அஸ்வின் இனிப்பகம் மேலாளர் சுதாகர் மற்றும் திருச்சி ஜே கே சி அறக்கட்டளை கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவிசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இதில் டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி, ருசி உணவக உரிமையாளர் ஜி கிருஷ்ணகுமார், திருச்சி ஜே கே சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார், திருமதி உமா மகேஸ்வரி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஆர்பிடி பாண்டியன், அஞ்சலகத்துறை முன்னாள் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஜிஎம் எழில் ஏழுமலை தொகுத்து வழங்கினார். முடிவில் செல்வி கிருத்திகா ராணி நன்றி கூறினார். இதில் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு போர்வை, 150 பேருக்கு மதிய உணவுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1