முன்னாள் அமைச்சர் வி வி எஸ் அவர்களை மத்திய மாநில அரசு கவுரவிக்க அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் தலைவர் திருமலை எம் ரவி கோரிக்கை

Dec 6, 2025 - 14:03
முன்னாள் அமைச்சர் வி வி எஸ் அவர்களை மத்திய மாநில அரசு கவுரவிக்க அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் தலைவர் திருமலை எம் ரவி கோரிக்கை

முன்னாள் அமைச்சர் வி வி எஸ் அவர்களை மத்திய மாநில அரசு கவுரவிக்க அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் தலைவர் திருமலை எம் ரவி கோரிக்கை

தமிழக அரசியல் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்ற முன்னாள் அமைச்சர் வி. வி.சுவாமிநாதன் நூற்றாண்டு 26/02/1926 பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது சிறப்பான பொதுசேவை மனப்பான்மையும், துறுதுறுப்பான நிர்வாகத் திறனும், தமிழக மக்களுக்காக அவர் செய்த சேவையும் இன்று நினைவுகூரத்தக்கவை. வழக்கறிஞராக தனது சமூகப்பணியைத் தொடங்கிய அவர், பொதுமக்கள் நலனுக்காக சட்ட, நிர்வாக, அரசியல் என பல்வேறு துறைகளில் தன்னலமின்றி சேவை செய்தவர். தமிழக அரசின் அமைச்சரவையில் பல முக்கியத் துறைகளுக்கு ஒரே நேரத்தில் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்தியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. துறைமுகம், சுற்றுலா, தகவல், மின்சாரம், வாணிபவரி, கைதையுறை போன்ற பல துறைகளில் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் இன்னும் பலராலும் நினைவு கூறத்தக்க வகையில் உள்ளது. மக்களின் வாழ்வில் நேரடியான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட அவர், எப்போதும் தன்னம்பிக்கை, தெளிவு, சமூக அக்கறை ஆகியவற்றை முன்னிறுத்தி, அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். கட்சி சார்பில்லாமல், மக்களின் நலனுக்குச் சேவை செய்தவர் என்ற பெருமை அவரது வாழ்க்கையின் இனிய அடையாளமாக இருந்து வருகிறது.

அவரது திறன், தகுதி, சிந்தனை, பாரம்பரியத்தை காக்கும் உறுதி மற்றும் பொதுமக்கள் நலனுக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் பண்புகள் இன்று பலருக்கும் ஊக்கமளிக்கின்றன. மேலும் தஞ்சாவூர் அய்யம்பேட்டை மினி பஸ் டிரைவர் சிவமணிகண்டன் மறைந்த நாளான 07/12/2024 போதை பொருள் ஒழிப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0