துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

Dec 8, 2025 - 11:01

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட, கிழக்கு மாநகர கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் நலிந்த நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பணமுடிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று சிறப்புரையாற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பங்கேற்றார். மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த நிகழ்விற்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்வி.ராஜ்குமார், மாநகர அமைப்பாளர் டி.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

முன்னதாக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கா மணிமாறன் வரவேற்புரை ஆற்ற, முடிவில் மாநகர கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை தலைவர் மு பாரதிதாசன் நன்றி கூறினார். நிகழ்த்தினார் இந்நிகழ்வில் மாவட்ட மாநகர பகுதி அணி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0