தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் - 2025 கொண்டாட்ட விழா

Sep 25, 2025 - 10:38
Sep 25, 2025 - 10:44
தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் - 2025 கொண்டாட்ட விழா
தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் - 2025 கொண்டாட்ட விழா
தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் - 2025 கொண்டாட்ட விழா

தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் - 2025 கொண்டாட்ட விழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் புதுடெல்லி மத்திய கல்வி அமைச்சத்தின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் வாயிலாக தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் - 2025 கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி சிறந்த வாழ்க்கைக்கு சரியாக சாப்பிடுங்கள் என்னும் கருப்பொருளுடன் போசான் அபியான் பிரச்சாரம் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் அருள் முனைவர் மரியதாஸ் சேச அருள்முனைவர் சகாயராஜ் சேச மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் கிராமத்தில் நடைபொற்ற போசான் அபியான் விழிப்புணர்வு பிரச்சாரத்தை உன்னத பாரத இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார். சேதுராப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தை செப்பர்டு முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கௌத்தநாயக்கன்பட்டி மற்றும் நகர பகுதிகளான காந்திநகர், தாகூர் தெரு, புத்தூர் சவேரியார் கோயில் தெரு, திருவானைககோயில், கொண்டையம் பேட்டை மற்றும் பிற செப்பர்டு பணி செய்யும் இடங்களில் இப்பிரச்சாரம் செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் மேனாள் அளுந்தூர் ஊராட்சி தலைவர் ஆரோக்கியசாமி ஊராட்சி மன்ற செயலர்கள் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துரித உணவு மற்றும் நெகிழி பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை உண்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றியும் ஊட்டச்சத்து உணவு உண்பதின் அவசியம் பற்றியும் பட காட்சிகளுடன் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. குழந்தைகளின் கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதிலளித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்தான உணவு பதார்த்தங்களான எள் கடலை பாசி பயறு கம்பு கேழ்வரகு நவதாணிய உருண்டைகள் வேகவைக்கப்பட்ட பட்டாணி கொண்டை கடலை நிலகடலை போன்ற இயற்கை உணவு வழங்கப்பட்டன. புகையில்லா சமையல் பற்றியும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இவ்விழாவில் மேனாள் ஊராட்சி தலைவர்கள் செயலர்கள் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0