திருச்சி உறையூரில் நடைபெற்ற சிலம்பப் போட்டியை அமைச்சர்கள் துவங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்கள்

Dec 12, 2025 - 09:48
Dec 12, 2025 - 09:50
திருச்சி உறையூரில்  நடைபெற்ற சிலம்பப் போட்டியை அமைச்சர்கள் துவங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்கள்

திருச்சி உறையூரில் நடைபெற்ற சிலம்பப் போட்டியை அமைச்சர்கள் துவங்கி வைத்து பரிசுகளை வழங்கினர்

திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.

கலை மற்றும் பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலாளர் எழில்மாறன் செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன்ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சிறப்பாக விளையாடிய மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசு 20 ஆயிரம், இரண்டாம் பரிசு 10ஆயிரம், மூன்றாம் பரிசு 7000 ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. உடன் கழக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைத்தலைவர் போஸ் வெங்கட், நடிகர் நாஞ்சில் விஜயன், சிலம்ப ஆசான் அ.குமரேசன், பயிற்சியாளர் நித்திஷ் குமார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0