ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சமச்சீர் உணவாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் உண்ணவும் நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்கவும் வேண்டும் : தமிழரசி சுப்பையா
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சமச்சீர் உணவுகளை உண்ணவும் நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்கவும் வேண்டும் : தமிழரசி சுப்பையா
தமிழ்நாடு குற்றாலம் அருகிலுள்ள இலஞ்சி ஊரில் செண்பக விநாயகா தேவர் தாய் லட்சுமி இணையரின் தவப்புதல்வி தமிழரசி. கணவர் முனைவர் சுப்பையா பாண்டியன். மகன் கார்த்திக். அனைவரும் பாரம்பரிய மருத்துவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். தமிழரசி சுப்பையா பாண்டியன் இயற்கை மருத்துவம் மூலம் நோயைக் குணப்படுத்துவதை விட, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சமச்சீர் உணவாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்புகள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவை உண்ண அறிவுறுத்துவதுடன் நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார். தினசரி ஆரோக்கியத்திற்கான நடைபயிற்சி, யோகா, பிராணயாமம், முத்திரை, தியானப் பயிற்சியினை வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்துகிறார். இது உடல் பருமன் மற்றும் பல நோய்களைத் தடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க இயற்கையுடன் இணைவது, தியானம் போன்ற முறைகளைப் பின்பற்றி அன்றாடம் தேவைக்கேற்ப தண்ணீர் குடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அது மட்டும் இன்றி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவு பழக்க வழக்கங்களை தவிர்க்கவும் வலியுறுத்துவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். திருச்சியில் நாற்பத்திரண்டு ஆண்டுகளாக சித்தா, ஆயுர்வேதா, அக்குபஞ்சர், இயற்கை மருத்துவம் செய்து வருகின்றார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) அரசியல் கட்சிகளில் பணியாற்றி வருகிறார். திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இரண்டாவது வார்டில் மாமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகராட்சி சுகாதார துறை தலைவர் பொறுப்பு வகித்தார். டாக்டர் தமிழரசி தினமலர் நாளிதழ் நடத்திய கட்டுரை போட்டியில் இரண்டு முறை முதல் பரிசு வென்றுள்ளார். தினமலர் நாளிதழில் இவருடைய கவிதைகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. மேலும் கிழக்குப் பதிப்பகம் தலைமுடி, பெண்களுக்கான யோகா என்ற நூலை வெளியிட்டுள்ளார். ஹெல்த் மற்றும் ஃபேமிலி ஹெல்த் மாத இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் ஏராளமாய் வெளிவந்துள்ளன. பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்கள் நலத்திட்ட உதவிகள் ஆயிரக்கணக்கில் நடத்தியுள்ளார். ஜெயா பிளஸ் தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சியில் யோகா பற்றி சொற்பொழிவாற்றியுள்ளார். சேவை செம்மல், சேவா ரத்னா, மருத்துவ சேவகர், வைத்திய ஜோதி, யோகா ரத்னா, தேவர் விருது, ஜெயசூர்யா விருது, அன்னை தெரசா விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில், தேவர் பேரவை, முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை அமைப்புகளில் செயல்பட்டு வருகிறார். அனைத்து துறை புத்தகங்களும் ஆயிரக்கணக்கில் சேகரித்து இல்லத்திலேயே நூலகம் வைத்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, எம்.பில், பி.எச்டி பட்டம் பெற்றுள்ளார் மருத்துவத் துறையில் நடைபெற்ற நூற்றுக்கணக்கான கருத்தரங்கு மாநாடுகளில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
யோகா விஜயகுமார் செயலாளர் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0