சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு நாராயன தோடு, எருமேலி போன்ற இடங்களில் அன்னதானம் : திருச்சி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு நாராயன தோடு, எருமேலி போன்ற இடங்களில் அன்னதானம் : திருச்சி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைப்பு
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 14 ஆண்டுகளாக சபரிமலை விழாக்காலமான கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து 60 நாட்கள் அன்னதானம் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் கே.கே.எஸ். கோனார் தோப்பில் உள்ள அன்னதான முகாமில் அளித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டும் அதேபோல் அன்னதானம் முகாம் 17.11.2025 முதல் செயல்பட்டு வருகிறது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சமயபுரத்திலும் அன்னதானம் ஐந்தாவது ஆண்டாக நடைபெற உள்ளது. சபரிமலையில் விழா காலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக அன்னதானம் செய்து வந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக நாராயன தோடு, எருமேலி, போன்ற இடங்களில் அன்னதானம் திருச்சி மாவட்டம் சார்பாக செய்ய உள்ளார்கள். இதற்காக (13.12.2025) நேற்று காலை ஸ்ரீரங்கம் அன்னதான முகாமில் இருந்து சுமார் 10 டன் எடை உள்ள மளிகை சாமான்கள், 2டன் எடை உள்ள காய்கறிகள் என மொத்தம் சுமார் 10லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் புரவலர் என்.வி.முரளி கொடி அசைத்து அன்னதான பொருட்களை அனுப்பி வைத்தார். மேலும் கே.ஆர்.டி. வெங்கடேஷ், கே.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கௌரவ தலைவர் சபரிதாசன், மாவட்ட செயளாலர் ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ், அலுவலக செயளாலர் சி.ஆர்.அம்சராம், துணைத்தலைவர்கள் முத்து, ராஜகோபால், இணைச்செயலாளர்கள் ராதாகிருஷணன், இளங்கோவன், சிதம்பரம், தர்மலிங்கம், தொண்டர் படை புஷ்பராஜ், ரகுநாதன் துணைக்கண்காணிப்பாளர் சசிக்குமார், முருகாந்தம் மற்றும் மாவட்டத்தின் பிற கண்காணிப்பாளர் அமைப்பாளர் பொறுப்பாளர்களும் சேவா சங்க கிளைகளை சார்ந்த உறுப்பினர்களும் ஆன்மீக அன்பர்களும் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0