10,000த்திற்கும் மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ள தமிழ்நாடு தனியார் கலை மற்றும் கலாச்சார சங்க நிறுவனர் நிர்மல் ராஜ்

Dec 15, 2025 - 11:20
Dec 15, 2025 - 11:21
10,000த்திற்கும் மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ள தமிழ்நாடு தனியார் கலை மற்றும் கலாச்சார சங்க நிறுவனர் நிர்மல் ராஜ்

10,000த்திற்கும் மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ள தமிழ்நாடு தனியார் கலை மற்றும் கலாச்சார சங்க நிறுவனர் நிர்மல்ராஜ்

10,000 மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ள மாண்புமிகு கலைஞன் தமிழ்நாடு தனியார் கலை மற்றும் கலாச்சார சங்கம் நிறுவனர் நிர்மல்ராஜ். இவர் மாநில, தேசிய, உலகளாவிய விருதுகளை பெற்ற செல்லதுரை திருமதி. ரெஜினா மேரி அவர்களின் மகன். திருச்சி காந்தலூரில் பிறந்து புனித வளனார் மேல்நிலை பள்ளியில் படித்து இனிகோ இல்லத்தில் தனது தனி திறமைகளை வளர்த்து மேலும் நாட்டுப்புற கலைகள் மேற்கத்திய நடனங்கள் நடிப்பு இசை பாடல் ஓவியம் போன்ற கலைகளை பயின்று மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியராக தனது பணியை 2010 தொடங்கினார். மேலும் சக நடன கலைஞர்களை வைத்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மாணவர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவித்தார். பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் நோக்கில் கோடை முகாம் நடத்தி அதில் மாணவர்களின் கலை திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

 கலைகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதை பெற்றோர்கள் மற்றும் மற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு அடைந்து பலர் கலைகளை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினர். 2019ஆம் ஆண்டு கலைகளால் உயர்வோம் என்ற நோக்கில் பாலக்காட்டில் டீம் ஆப் ஈகிள் என்ற முதல் கலை குழுவினை நண்பர் பிரின்ஸ் உதவியோடு கலைக்குழு இயக்கத்தை சிறப்பான முறையில் நிறுவினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலை திறமைகளை வளர்த்து பல போட்டிகள் வைத்து அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்தார். இக்கலை தமிழ்நாடு முழுவதும் நாட்டுப்புற கலைஞர்களின் உதவியோடு பல்வேறு பள்ளி சமூக நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் 2023 ஆண்டு திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் சிறகை விரிக்க கலை விழா போட்டி திருச்சியில் நடைபெற்றது. இப்போட்டியை நிர்மல்ராஜ் தொடங்கி வைக்க கலை விழா போட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் திறமைக்கான மேடையாக மாறியது. மேலும் தஞ்சாவூர், காரைக்குடி, மன்னார்குடி, கும்பகோணம், பட்டுக்கோட்டை , ஈரோடு, சென்னை போன்ற இடங்களில் உச்சம் தொடு எட்டுத்திக்கும் பெற என பல்வேறு தலைப்புகளில் கலை விழா போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை பத்தாயிரம் கலைஞர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் தனது தனி திறமைகளை வெளிக்கொண்டு வரும் மாணவர்களை உலக சாதனை செய்ய துணை புரிந்து இருக்கின்றார். மேலும் இவர் சிறுவர்கள் பாராளுமன்றம் பொறுப்பாளராக செயல்பட்டு வருகின்றார். கல்வி மற்றும் கலைகளில் திறமையாக இருக்கும் மாணவர்களை டெல்லி குழந்தைகள் பாராளுமன்ற நிகழ்விற்கு கூட்டிச்சென்று மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பயிற்றுவித்து வருகிறார்.

2021 இல் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் சோசியல் புரொடக்ஷன் இவருடைய கலை சேவையை பாராட்டி மாநில விருது வழங்கப்பட்டது. கேரள நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கையால் தேசிய விருது வழங்கப்பட்டது. மலேசியாவில் ஆன்மிக சங்கம் மற்றும் தனியார் ஹியூமன் ரைட்ஸ் இவர் கலை திறமையை பாராட்டி உலகளாவிய விருது வழங்கி கௌரவித்தது. மேலும் கலைகளின் நாயகன் விருது சிறந்த கலைஞருக்கான விருது மாண்புமிகு கலைஞர் விருது, சூப்பர் ஹீரோ விருது, நட்சத்திர நாயகன் விருது போன்ற விருதுகளை வாங்கி சாதனை படைத்துள்ளார். திரைப்பட நடன ஆசிரியர் கலா மாஸ்டர் அவர்களிடம் விருது பெற்றுள்ளார்.

மேலும் திரைப்படக் கலைஞர்களை வைத்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றார். நண்பர் கலைக்கோவன், ஆசிரியர்கள் திருமதி சிவரஞ்சனி, ஸ்டீபன், திருமதி.கலைவாணி , விக்னேஷ், சதீஷ், பாசித், திருமதி நிர்மலா, திருமதி.கௌரி, செல்வி.ரிச்சா ஆகியோர்களின் உறுதுணையோடு தமிழ்நாடு தனியார் கலை மற்றும் கலாச்சாரம் சங்கம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது. கலையை வளர்த்தெடுக்கும் நோக்கில் இவருடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நடன கலைஞர்கள் துணை புரிந்து வருகின்றனர். இவர் முயற்சியின் வழியாக பல மாணவர்கள் கலை மற்றும் சினிமா துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0