திருச்சி பாலக்கரை பகுதியில் பழைய இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது

Dec 16, 2025 - 17:45
திருச்சி பாலக்கரை பகுதியில் பழைய இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் பழைய இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 37). இவர் இ.பி சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாபெட்டியில் இருந்த ரூ.20ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திருட்டில் ஈடுபட்டது இ.பி. சாலை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த வீரவேல் (18) என்பது தெரிய வந்தது.அவரை போலீசார் கைது செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0