தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா

Dec 17, 2025 - 16:24
தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா

திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா தென்னூர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகத்தலைவர் சார்லஸ் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தகத்தை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.

நூலாசிரியர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார் பேசுகையில், புழங்கு பொருட்கள் என்பவை மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும், வழக்கத்தில் இருக்கும் பொருள்கள். இவை வெறும் உபயோகப் பொருள்கள் மட்டுமல்லாமல், அவற்றோடு மக்களின் உணர்வுகள், பண்பாடு, வாழ்வியல் முறைகள் பின்னிப் பிணைந்திருக்கும். அவை இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்கள் உதாரணமாக, மண் பானைகள், அம்மி, ஆட்டுரல், உரல், உலக்கை,திருக்கை உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருள்கள், விவசாயக் கருவிகள் போன்றவையாகும், இவை ஒரு காலத்தின் பண்பாட்டையும், மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிப்பவை ஆகும். புழங்கு பொருட்கள் பண்பாட்டு அடையாளம், ஒரு சமூகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்வியல் முறைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய உதவுகின்றன அம்மி, குழவி, பானைகள், தட்டுகள், விளக்குகள், வேளாண் கருவிகளில்ஏர், கலப்பை போன்ற விவசாயக் கருவிகள் பண்டைய காலப் பொருட்களில் மண் பாண்டங்கள், மூங்கில் கூடைகளிலிருந்து மண், இரும்பு, செம்பு, பித்தளை, வெண்கலம் என உலோக காலங்களில் வெளிவந்த புழங்கு பொருட்களை சேகரித்து வைத்துள்ளதை நூலாக வெளியிட்டுள்ளேன்.புழங்கு பொருள்கள் என்றார். நாணயங்கள் சேகரிப்பாளர்கள் நாசர், மகராஜன், கரூர் ராஜீ, பாண்டியன், முகமது சுபேர், குணசேகரன், கமலக்கண்ணன், சிவக்குமார், தனராஜ், இளம்வழுதி, தஞ்சை காசிநாத், சக்திவேல், லட்சுமி நாராயணன், ராஜ்குமார், காமராஜ், கார்த்தி, முகமது சித்திக், அன்பழக பாண்டியன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0