திருச்சி அருகே இன்று நடைபெறும் குறிப்பிட்ட சமுதாயத்தின் சங்க மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள இராஜ ராஜ சோழன் பேனரை அகற்ற வேண்டும் : கள்ளர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் சரவணன்

Jan 25, 2026 - 08:19

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் கள்ளர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாளை (இன்று) திருச்சி அருகே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜ ராஜ சோழன் படம், பெயர் பொறித்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்கள் தவறுதலாக உள்ளது.

இது தவறான செயலாகும். இரு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த பேனர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரை அகற்ற வேண்டும் என்று திருச்சி மத்திய மண்டல ஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு எங்களது சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு இரு சமூகத்தினர் இடையே அமைதி நிலவும் வகையில் அந்த பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0