சோமங்கலம் அருகே 5 மற்றும் 6 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு ; போதையில் இருந்த நபரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

Sep 28, 2025 - 10:54

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் ஐந்து மற்றும் ஆறு வயது சிறுமிகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்துள்ளனர். நேற்று இரவு 2 சிறுமிகளும் கடைக்கு சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்கிற 50 வயது நபர் பிஸ்கட் வாங்கி கொடுத்து அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கூச்சலிட்ட சிறுமிகள் அங்கிருந்து தப்பி ஓடி வந்துள்ளனர். அப்பகுதி மக்கள் போதையில் இருந்த சங்கரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து சோமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் தொடர்ந்து சங்கரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0