கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் தலைவர் திருமலை எம் ரவி இரங்கல்

Sep 28, 2025 - 11:16
கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு   அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் தலைவர் திருமலை எம் ரவி இரங்கல்

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் தலைவர் திருமலை எம் ரவி இரங்கல்

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் தலைவர் திருமலை எம் ரவி இரங்கல்தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 39 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி கரூரில் உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியது. மேலும் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் காயம் பட்டவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அரசும் பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க பல முன்னேற்பாடுகள் செய்துள்ள நிலையில் நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மேலும் மத்திய அரசு மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த துயரமான சூழ்நிலையில் அரசு அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்க உறுதி ஏற்போம். வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க அரசும் காவல் துறையும் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து பொதுமக்கள் நலன் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மரணமடைந்த என் தமிழ் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் இவ்வாறு தமது அறிக்கையில் திருமலை எம் ரவி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0