திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மகளிர் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் : மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வழங்கினார்

Mar 8, 2026 - 16:17

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட செயலாளர் தமிழரசி சுப்பையா, மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவிகள் சபீனா புவனேஸ்வரி, பேகம் மீரான் ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகளிர் தினத்தை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் வனிதா, பகுதி கழக செயலாளர்கள் ராஜேந்திரன், வாசுதேவன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, வெங்கட் பிரபு, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன், வர்த்தக அணி ஆடிட்டர் ரவி, பிரபாகர், வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், சுப்பன் என்கிற சுப்பிரமணியன், வட்டச் செயலாளர் என்.டி.மலையப்பன், மகாலட்சுமி மலையப்பன், நிர்மலா, மகளிர் அணி ராஜலட்சுமி, புத்தூர் ரமேஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0