விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிந்தனைச்செல்வன், திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று கூறியிருப்பது நகைப்புரியது : பார்க்கவ குல எபிபிஎஸ் தலைவர் திருமலை எம் ரவி கண்டனம்

May 9, 2026 - 13:13
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிந்தனைச்செல்வன், திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று கூறியிருப்பது நகைப்புரியது : பார்க்கவ குல எபிபிஎஸ் தலைவர் திருமலை எம் ரவி கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிந்தனைச்செல்வன், தொல் திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று கூறியிருப்பது நகைப்புரியது : பார்க்கவ குல எபிபிஎஸ் தலைவர் திருமலை எம் ரவி கண்டனம்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பார்க்கவ குலத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் சார்பில் வாழ்த்துக்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகம் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தமிழக அரசியலில் இருபெரும் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து 108 சட்டமன்ற உறுப்பினர்களை போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றிக் கனியை தனதாக்கிக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் இன்னும் அமைச்சரவை பொறுப்பேற்கும் சூழல் உருவாகாதது தமிழக மக்கள் மனதில் கவலை அளிக்கும் வகையில் உள்ளதால் விரைவில் நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன். இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி அன்புச் சகோதரர் சிந்தனைச்செல்வன் அவர்கள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களே உள்ள நிலையில் தொல் திருமாவளவன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று கூறியிருப்பது நகைப்புரியது. தேர்தல் அறிவிப்பு வந்த நாளில் இருந்து முன்னுக்குப் பின் முரணாக பேசி திமுகவின் நம்பகமான கூட்டாளியாக நடிப்பது தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறுவது நாங்கள் மாற்றி முடிவெடுத்து இருந்தால் தமிழ்நாடு அரசியலே மாறி இருக்கும் என்று கூறுவது மறுபுறம் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கூறும் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களை அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு கரூர் சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலன் காக்க மின்சார கட்டணம் பிக்சட் சார்ஜ் சொத்துவரி தொழில் வரி குறைக்கவும் மூலப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த மானிட்டரிங் கமிட்டி அமைக்கவும் நலிந்த நிறுவனங்களின் வங்கி கடனுக்கான வட்டி அபராத வட்டி தள்ளுபடி செய்யவும் பம்ப் செட் பவுண்டரி மற்றும் கிரில் பேப்ரிகேஷன் தொழில்களை காத்திட கொங்கு மண்டலத்தை சிறப்பு தொழில் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தென் மாவட்டங்களான விருதுநகர் இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்களில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் பஞ்சாலைகள் நிறுவி இந்த மாவட்ட மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறும் போது உரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திட்டம் விளைந்த நெல் மணிகளை பாதுகாக்க உலர்கலங்கள் காய்கறி அதிகம் விளையும் காலங்களில் விலை குறையும் போது மிகப் பெரும் குளிர்சாதன கிடங்குகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அமையப் போகும் புதிய அரசு கல்வி வேலைவாய்ப்பு எம் எஸ் எம் ஈ துறை விவசாயம் குடிமராமத்து பணிகள் தரிசு நிலம் மேம்பாட்டு பணிகள் சாதிவாரி கணக்கெடுப்பு போதைப்பொருள் ஒழிப்பு பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு திரு திருமலை எம் ரவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0