புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர்க்கு தொல்லியல் அறிஞர் விருது
புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர்க்கு தொல்லியல் அறிஞர் விருது
தொல்லியல் ஆய்வு மையம் நிறுவனத்தலைவர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் என்பதாம் அகவை தினவிழா விழா, சிறப்பு மலர் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா திருச்சி தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெற்றது. திருமதி அனிதா குமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி. கோபால் முன்னிலை வகித்தார். சர்க்கரை ஆலைக் குழும நிர்வாக இயக்குனர் மு.இராமலிங்கம் சிந்து சமவெளிச் சித்தர் என்பதாம் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார், கிராமாலயா இயக்குனர் பத்மஸ்ரீ விருதாளர் சே.தாமோதரன், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் மேனாள் அறங்காவலர் பொறியாளர் பி.கே.தியாகராஜன், மருத்துவர் எஸ். பன்னீர்செல்வம், வழக்கறிஞர் பி.நமச்சிவாயம், ராமசாமி கல்லூரி முதல்வர் முனைவர் செ.நாகநாதன், அழகப்பா பல்கலைக் கழகம் மேனாள் பதிவாளர் கி.காளைராஜன் உட்பட பலர் சிறப்பு மலரை பெற்று வாழ்த்துரை வழங்கினார்கள். சந்திரபோஸ் அறக்கட்டளை, தொல்லியல் ஆய்வு மையம் நிறுவனத் தலைவர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தொ(ல்)லியல் அந்தரங்கம் தலைப்பில் சிறப்பு காணொலிக் காட்சியினை ஒளிப்பரப்பி விளக்கினார். தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் இல்லத்திலேயே புழங்கு பொருட்கள் காட்சியகம் நடத்தி வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு திருமதி அனிதாகுமார், சு. கார்த்திகேயன் போஸ் உள்ளிட்டோர் தொல்லியல் அறிஞர் விருது சான்றிதழை வழங்கினர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0