திருச்சியில் மதுக்கடை மூடக்கோரி கவுன்சிலர் அரவிந்தன் பொதுமக்கள் போராட்டம் : போராட்டத்தை முன்னிட்டு கடை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு : கவுன்சிலர் அரவிந்தனுக்கு பொதுமக்கள் பாராட்டு

May 18, 2026 - 14:57

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், பள்ளி கல்லூரிகள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் 717 அரசு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார். அதன்படி மதுக்கடைகள் திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் பாபு ரோடு பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பகுதி அதிமுக கவுன்சிலரும், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளருமான அரவிந்தன் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து மதுக்கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுப்பு போன்று வைக்கப்பட்டிருந்த தகர தட்டியையும் அகற்றினர்.இந்தப் போராட்டத்தால் பாபரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் பொதுமக்களிடம் கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் குறித்து கவுன்சிலர் அரவிந்தன் கூறும் போது, பாபு ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.மக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த கடையை அகற்ற முன்வரவில்லை. அதனால்தான் பொதுமக்களை திரட்டி எனது தலைமையில் இன்று மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது கடையை மூடுவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். கடையை மூடாவிட்டால் பொதுமக்களை திரட்டி தொடர்ந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார். இதைத் தொடர்ந்து அந்த கடை நிரந்தரமாக மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடை நிரந்தரமாக மூடியதை முன்னிட்டு கவுன்சிலர் அரவிந்தனை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0