ஆதரவற்ற மூதாட்டி மரணம் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

May 19, 2026 - 14:01
ஆதரவற்ற மூதாட்டி மரணம் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

ஆதரவற்ற மூதாட்டி மரணம் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கே.கள்ளிக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அருவாக்குடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தின் கரையை ஒட்டி சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பெயர் விலாசம், தெரியாதவர் சுயநினைவின்றி இருந்தவரை கிராமத்தார் உதவியுடன் தீயணைப்பு படை பிரிவினர் மீட்டு உயிர்காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இறந்த நபர் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலை யாரும் உரிமை கோரவில்லை. ஆதரவற்ற உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி மாவட்டம் இராம்ஜி நகர் காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர், அண்ணா நகர், குழுமிக்கரை மயானத்தில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதத்தை உரிய மரியாதையுடன் ராம்ஜி நகர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் வாசுதேவன் முன்னிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0