இலங்கையில் நடைபெற்ற 12 வது சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகளில் திருச்சியைச் சேர்ந்த பிரஞ்சு மொழி பாட ஆசிரியை திருமதி கீதா ஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று சாதனை

May 27, 2026 - 20:45
May 27, 2026 - 20:46
இலங்கையில் நடைபெற்ற 12 வது சர்வதேச மூத்தோர்  தடகள போட்டிகளில் திருச்சியைச் சேர்ந்த பிரஞ்சு மொழி பாட ஆசிரியை திருமதி கீதா ஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று சாதனை

இலங்கையில் நடைபெற்ற 12 வது சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகளில் திருச்சியைச் சேர்ந்த பிரஞ்சு மொழி பாட ஆசிரியை திருமதி கீதா ஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று சாதனை

திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்திலிருந்து இந்திய அணியின் சார்பாக இலங்கையில் நடைபெற்ற 12 வது சர்வதேச மூத்தோர் தடகள (Masters Athletics) போட்டிகளில் திருச்சியைச் சார்ந்த பிரஞ்சு மொழி பாட ஆசிரியை திருமதி கீதா ஸ்ரீ அவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு 5000 மீட்டர் நடை போட்டியிலும் 3000 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று உள்ளார்.

இவர் சென் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளிகளும் பிரெஞ்சு மொழி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்று தாயகம் திரும்பிய திருமதி கீதா ஸ்ரீ அவர்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் அன்பழகன், செயலாளர் முனைவர் நல்லசாமி அண்ணாவி, பொருளாளர் சசி வாரியார் முன் நின்று இந்த வரவேற்பினை சிறப்பாக நடத்தினர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0