திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் பாலக்கரை பகுதி ஆலோசனை கூட்டம்

Jun 1, 2026 - 16:06
Jun 1, 2026 - 16:07
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் பாலக்கரை பகுதி ஆலோசனை கூட்டம்

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் பாலக்கரை பகுதி ஆலோசனை கூட்டம்

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையிலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளருமான ரத்தினவேல் முன்னிலையிலும் பாலக்கரை பகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆவின் கார்த்திகேயன், அதிமுக கட்சி என்பது வளர்ந்து ஆலமரமாக இருக்கக்கூடிய கட்சி. கட்சியில் இருந்து சில நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவது ஆலமரத்தில் இருந்து இலைகளாக உதிர்வது போன்று. இதனால் ஆலமரத்துக்கு எந்த இழப்பும் இல்லை, ஒரு இலை உதிர்ந்தால் பல இலைகள் துளிரும். எனவே கட்சியிலிருந்து விலகுபவர் பற்றி நமக்கு கவலையே இல்லை,

நமது பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீவிரக் கட்சிப் பணி ஆற்றுவோம். நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட இடைத்தேர்தலில் தீவிர பணியாற்றி அனைத்து தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அம்மா பேரவை மாநில இணை செயலாளரும், கவுன்சிலருமான அரவிந்தன், திருச்சி மாமன்ற அதிமுக தலைவரும் கவுன்சிலருமான ஆர்.அம்பிகாபதி, இலக்கிய அணி செயலாளர் பாலாஜி, டி.ஆர்.சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் எம் ஆர் ஆர் முஸ்தபா, கருமண்டபம் சுரேந்தர், வெங்கட் பிரபு, கலீலுல் ரகுமான், வட்ட செயலாளர்கள் எஸ்.எம்.டி.மணிகண்டன், நத்தர்ஷா, கயிலை கோபி, தர்கா காஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அசைவ உணவும் வழங்கப்பட்டது .

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0