தற்கொலை செய்து கொண்ட அதிமுகவின் தீவிர விசுவாசி மகேந்திரன் திருவுருவ படத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அஞ்சலி

Jun 2, 2026 - 15:00
தற்கொலை செய்து கொண்ட அதிமுகவின் தீவிர விசுவாசி மகேந்திரன் திருவுருவ படத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அஞ்சலி

தற்கொலை செய்து கொண்ட அதிமுகவின் தீவிர விசுவாசி மகேந்திரன் திருவுருவ படத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அஞ்சலி

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). இவர் திருப்பனந்தாள் கடைத்தெருவில் பூக்கடை நடத்தி வந்தார். அதிமுகவில் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக பதவி வகித்தார். இவருக்கு முனீஸ்வரி (வயது 25) என்ற மனைவியும், நித்ஸ்ரீ (வயது 1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுவில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக மகேந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, கட்சியில் நடக்கும் நிகழ்வால் என்னை மாதிரி எளிய தொண்டர்கள் ரொம்பவே மன வேதனையுடன் இருக்கிறோம். என்னுடைய இறப்பிற்கு பிறகாவது கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்று சேர வேண்டும். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அ.தி.மு.க-வின் எளிய தொண்டனாக இருக்க ஆசைப்படுகிறேன்’ என்று மகேந்திரன் பேசி வீடியோ எடுத்து அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதைதொடர்ந்து தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் மகேந்திரன். இது அதிமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினால் என் ஆத்மா சாந்தியடையும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மகேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி. இறந்தவர்கள் குடும்பத்திற்கு 55 லட்ச ரூபாய் வழங்கி அவரது மகனின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் அதிமுக தொண்டனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் நான் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மறைந்த மகேந்திரனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளரும் திருச்சி மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, மாவட்ட பொருளாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம் ஆர் ஆர் முஸ்தபா, கருமண்டபம் சுரேந்தர், வெங்கட் பிரபு, கலைவாணன், கலை இலக்கியப் பிரிவு ஜான் எட்வர்ட் குமார், சிறுபான்மை பிரிவு தென்னூர் அப்பாஸ், பேரவையை சேர்ந்த பொன்னார், கவுன்சிலர் அம்பிகாபதி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அப்பாகுட்டி, டிபன் கடை கார்த்திகேயன், நிர்வாகிகள் நத்தர்ஷா, VSP மகாதேவன், மலைக்கோட்டை சண்முகம், கருமண்டபம் ஆனந்த், கோழி கடை பாலு, சுரேஷ் குப்தா மற்றும் ஏராளமானோர் தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0