திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா : வட்ட செயலாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது

Jun 3, 2026 - 10:53

முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. திருச்சி தெற்கு மாவட்டக் செயலாளரும், முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்குத் தொகுதிக்குட்பட்ட டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் அமைந்துள்ளமுன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகரக் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் சல்மா கலந்து கொண்டு, கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர வட்டக் செயலாளர்களுக்குப் பொற்கிழிகளை வழங்கி அவர் கௌரவித்தார். இந்நிகழ்வில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வன்னை அரங்கநாதன், கே.என்.சேகரன், மாநில அணி நிர்வாகி செந்தில், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0