வாகன விபத்தில் பலியான பெண் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

Jun 9, 2026 - 13:59
வாகன விபத்தில் பலியான பெண் :  நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

வாகன விபத்தில் பலியான பெண் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி கூத்தூர் பிரதான சாலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்த போது அதே திசையில் அவருக்கு பின்னால் வந்த வாகனம் மோதியதில் அவருக்கு தலை மற்றும் உடம்பில் காயம் ஏற்பட்டது. அப்பெண் உயிர்காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார். விபத்து சம்பந்தமாக கொள்ளிடம் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். வாகன விபத்தில் பலியான பெண் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலை யாரும் உரிமை கோரவில்லை. உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சியில் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு கொள்ளிடம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மரகதம் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் குழுமிக் கரை மயானத்தில் சரக காவல்நிலைய காவலர் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0