பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழக அரசும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Jun 14, 2026 - 20:05

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் டாக்டர் ஆர். பிரபாகரன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகளை பொதுச் செயலாளர் டாக்டர் ஆர். உதயகுமார் வழிநடத்தினார். கூட்டத்தின் போது, பொருளாளர் டாக்டர் எம். ரெங்கசாமி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். முன்னதாக திருச்சி தலைவர் பி. மணிகண்டன் வரவேற்றார் இறுதியாக டாக்டர் பி. கிஷோரி நன்றி கூறினார். கூட்டத்தின் முக்கிய அம்சமாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உள்வாங்கல் மற்றும் தொழில் முன்னேற்றத் திட்ட தொடர்பான விவகாரம் விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குப் பிறகு, நிலுவையில் உள்ள அனைத்து உள்வாங்கல் நடவடிக்கைகளும் பதவி உயர்வுகளும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். தகுதியுடைய அனைத்து கற்பித்தல் பணியாளர்களின் உள்வாங்கல் செயல்முறையையும் மேலும் தாமதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழக அரசும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0