திருச்சியில் அன்றாடம் அன்னதானம் வழங்கும் குடும்பத்தினர்

Jun 15, 2026 - 16:30
Jun 15, 2026 - 16:32
திருச்சியில் அன்றாடம் அன்னதானம் வழங்கும் குடும்பத்தினர்

திருச்சியில் அன்றாடம் அன்னதானம் வழங்கும் குடும்பத்தினர்

திருச்சி புத்தூர் பிஷப் குளத் தெரு பகுதியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா, கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோர் குடும்பம் சகிதமாக அன்றாடம் அன்னதானம் வழங்கி வருகிறார்கள். அன்னதானம் வழங்கி வருவது குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்ற தமிழரின் உயரிய வாழ்வியல் தத்துவம், அன்னதானத்தின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. மனித வாழ்க்கையின் அடிப்படை உரிமைகளில் முதன்மையானது உணவு. பசியால் வாடும் ஒருவருக்கு உணவளிப்பது ஒரு தானம் மட்டுமல்ல, அது உயிரைக் காக்கும் மனிதநேயப் பொறுப்பாகும். நவீன உலகம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியிருந்தாலும், உணவுப் பாதுகாப்பு இன்னும் பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த நிலையில், தங்களது குடும்ப வாழ்க்கையோடு சமூகப் பொறுப்பையும் இணைத்து அன்றாடம் அன்னதானம் வழங்கி வருகிறோம். மேலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் பல்வேறு விசேஷ நிகழ்வுகளில் மீதமுள்ள தரமான உணவுகளை சேகரித்து, அவற்றை பாதுகாப்பாக ஆதரவற்றோர் மற்றும் பசியால் வாடும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையினை தொடர்ந்து செய்து வருகிறோம்.

பசியால் ஏற்படும் உடல் மற்றும் மன வேதனையை குறைக்கிறது. ஆதரவற்றோருக்கு மனித மரியாதையுடன் வாழும் நம்பிக்கையை அளிக்கிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார சுமையை குறைக்கிறது. உணவு வீணாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. பசியை ஒழித்தல், உணவு வீணாக்கத்தை குறைத்தல், சமூக நலனை மேம்படுத்தல் மற்றும் வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்கு அன்றாட அன்னதானப் பணிகள் உதவுகிறது என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0